630 ‘பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் நினையுங் காலை அம்மொடு சிவனும்’ (தொல். 283) என்பதனால் பொருட்புணர்ச்சிக்கண் அரை அம்முப் பெற்றது. இச்சாரியையை உருபுபுணர்ச்சி பெறாமல் புளிக்கு அரைக்கு என முடிந்தது. ‘இவ்வேற்றமை உருபுகளை நிலைமொழியாக நிறுத்தி ஈண்டே வருமொழிகளொடு புணர்க்க’ என்றார் மயிலை நாதர். (நன். 241) உயிரீற்றுப்புணரியலுள்ளும் மெய்யீற்றுப் புணரியலுள்ளும் உருபுஏற்ற சொற்கள் நிலைமொழிகளாக நிறுத்தப்பட்டு அவை வருமொழிகளோடு புணரும் புணர்ச்சி கூறப்படுகின்றமையின், அவற்றை மீண்டும் ஈண்டுக்காட்டல் கூறியது கூறலாம் என்பார் இவர். ‘எழுவாயும் விளியும் ஒழித்துத் தமக்கு என உருபு முதல் ஈறும் உடைய ஐ முதலிய ஆறு உருபிற்கும் இல்விதி கூறுகின்றார் என்பதூஉம். இவ்வுருபுகளின் முதல் ஈறுகளுக்கு மாட்டேற்றான் இவ்விதி கூறவே, உருபுகளின் இரு மருங்கும் புணரும் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் படும் பாகுபாட்டிற்கு விதி போன இரண்டு இயலுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்கு என விதித்தவற்றுள் அடங்கும் ஆதலின் அவையும் இம்மாட்டேற்றான் அமைத்தார் அல்லர் என்பதூஉம், அங்ஙனம் அடங்குதற்கு ‘மூன்றுருபு’ (நன்’ 179) என்னும் சூத்திரமே கரி என்பதூஉம், ‘தான்தாம் நாம் முதல் குறுகும்’ (நன்.247) என்றல் தொடக்கத்து உருபொடு புணரும் நிலைமொழிகளின் விகாரங்கள் தொகை நிலைக்கண்ணும் நாற்கணத்தின் முன்னும் வருதலின் அவ்விகாரம் எழுத்துப்புணர்ச்சியான் வந்தன அல்ல, வேற்றுமைப் பொருள்நோக்கத்தானே வந்தன. அதனால் இவ்வியலுள் கூறப்படும் என்பதூஉம்.............’ என்பது நன். 242 விருத்தியுரை. |