631 ஒத்த நூற்பா: ‘ஒற்றுயிர் முதல்ஈற்று உருபுகள் புணர்ச்சியின் ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே’ நன். 242 வேற்றுமையுருபுகட்கு இடையேவரும் சாரியை 149 எல்லா ஈற்றும் சொல்லுங் காலை வேற்றுமை உருபிற்கு இன்னேசாரியை இனி, மாட்டேற்றான் அன்றி விதந்து ஓதுவான் புகுந்தவற்றுள், இது பொதுவகையான் வேற்றுமை உருபுகட்கு வரும்சாரியை இது என்கின்றது. இ-ள். உயிரும் ஒற்றும் ஆகிய எல்லா ஈற்றுப் பெயர்களின் முன்னும் வேற்றுமை உருபுகட்கு இடையேவரும் சாரியை இன்சாரியையாம், சொல்லும் காலத்து என்றவாறு. வரலாறு: விளி-பலா-சிளி-தீ-கடு-பூ-சே-தினை-சோ-கௌ எனவும், உரிஞ்- மண்-பொருந்-திரும்-பொன்-வேய்-நார்-கல்-தெவ்-யாழ்-முள்-எனவும், நாகு-வரகு எனவும் நிறுத்தி இன்உருபு ஒழித்து எனை ஐந்து உருபும் வருவித்து இன்சாரியை கொடுத்து விளவினை-விளவினொடு என்றாற்போலப் பிறவற்றொடும் ஒட்டிக்காண்க. பிறவும் அன்ன. 2 விளக்கம் ‘இன்என வரூஉம் வேற்றமை உரூபிற்கு இன்என் சாரியை இன்மை வேண்டும்’ (தொல். 131) என்பதனால் இன் உருபை விடுத்து, எனை உருபுகளையே கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியனார் |