632 அ-ஆ-உ-ஊ-ஏ-ஒள என்னும் உயிர்ஈறுகளும் ஞ-ந-ம-ன என்னும் புள்ளியீறுகளும் குற்றியலுகரமும் இன்சாரியை பெறும் என்றார். இவர் எல்லா ஈறுகளுக்கும் கொண்டார். அவற்றுள் எகரம் அளபெடைக்கண் அன்றி ஈறாகாமையின், அதனை விடுத்தார் என்று அறிக. ஒத்த நூற்பாக்கள்: ‘அ ஆ உ ஊ ஏஒள என்னும் அப்பால் ஆறன் நிறைமொழி முன்னர் வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை.’ தொல். 173 ‘ஞநஎன் புள்ளிக்கு இன்னே சாரியை, 182 ‘குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றுத் தோன்றும் இன்என் சாரியை,’ 195 ‘அழனே புழனே ஆயிரு மொழிமேல் அத்தும் இன்னும் உறழத் தோன்றம் ஒத்தது என்ப உணரு மோரே.’ 193 ‘அஆ உஊ ஏஒள இறுபெயர் முன்வரும் உருபிற்கு இன்னே சாரியை,’ மு.வீ.பு.49 ‘குற்றிய லுகரக்கு இன்னே சாரியை.’ 45 ‘ஞநஇறு மொழிஇன் னொடுநடை பெறுமே.’ 56 ‘இன்னொடு வருதலும் அதன்இயல் பாகும்.’ 60 ‘எல்லா எண்களும் இன்னொடு சிவணும்.’ 68 அற்றுச்சாரியைப்பேறு 150 பல்லவை நுதலிய அகர இறுபெயர் அற்றொடு சிவணல் எச்சம் இன்றே. |