பக்கம் எண் :

635

‘கோவினை அடக்கவந்து’ 180 நச். உரை 180

தொல்காப்பியனார் ஓகார இறுதி ஒன்சாரியைபெறும் என்றார். கோஒன் என்பதன்கண் ஒகரத்தை எழுத்துப் பேறளபெடையாகக் கொண்டு பிற்காலத்தார் கோ-னகரச் சாரியை பெறும் என்றனர்.

ஒத்த நூற்பாக்கள்:

‘னகரம் ஒற்றும் ஆவும் மாவும்’           தொல். 231

‘ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும்’      264

‘ஆன் ஒற்று அகரமொடு நிலைஇடன் உடைத்தே’      232

முழுதும்           நன்.248

‘ஆமா னகரமெய் அடையப் பெறுமே.           மு. வீ.பு. 96

‘ஆன்ஒற்று அகரமொடு நிலையிடன் உடைய’.      97

‘ஊ-னகரத்தொடு ஒழுகும் என்ப.’      119

‘எல்லாம்’ என்பது சாரியை பெறுதல்

152 எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்றோடு உருபின் மேல்உம் உறுமே.
அன்றேல் நம்இடை அடைந்துஅற்று ஆகும்.

இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப்பிறிது விதி வகுக்கின்றது.

இ-ள்,: எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைப் பெயராயின், இடையே அற்றுச்சாரியையும் உருபின் பின்னே உம்முச்சாரியையும் பெற்று முடியும், உயர்திணைப் பெயராயின் இடையே நம்முச்சாரியையும் உருபின்பின்னே முன்போல உம்முச்சாரியையும் பெற்றுமுடியும் என்றவாறு.

வரலாறு: எல்லாவற்றையும் எல்லாவற்றொடும் எனவும், எல்லாநம்மையும் எல்லாநம்மொடும் எனவும் வரும்.