பக்கம் எண் :

636

பிறவற்றொடும் ஒட்டுக, உயர்திணை ஆயவழி அவற்றிற்கு நாம் எல்லோரையும், நாம்எல்லாரொடும் எனப்பொருள் உரைக்க.

விளக்கம்

எய்தியது-இன்சாரியை.

பிறிதுவிதி-அஃறிணைக்கண் அற்றுச்சாரியையும் உயர்திணைக்கண் நம்முச்சாரியையும் பெறும் என்பது.

இவ்வற்றுச் சாரியையும் நம்முச்சாரியையும் ‘எல்லாம்’ என்பதன் பொதுமையை நீக்கி அதனை ஒரே திணைக்கு உரிமை ஆக்குவதால், இவை ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவ’ வந்தனவாதல் அறிக.

‘எல்லாம் என்பது இழிதிணையாய் இனற்றொடு’ எனப் பிரித்து, இன்சாரியையும் அற்றுச்சாரியையும் பெறும் எனவும் பொருள்கொண்டு, எல்லாவற்றினையும் முதலிய எடுத்துக்காட்டுக்கள் நன்னூல் விருத்தியுரையுள் காட்டப்பட்டுள்ளன. (நன்.245)

‘இச்சொற்கு இருதிணைக்கண்ணும் அற்றுச்சாரியையும் நம்முச்சாரியையும் வேண்டியே வருதல் தோன்ற இன்றிமையா முற்றும்மையோடு உடன் நிகழ்ச்சிப் பொருளவாய் ‘அற்றோடு’ என்றும் ‘அடைந்து அற்றாகும்’ என்றும் கூறினார்” எனவும், ‘தம்-நம்-நும் என்பன மூவிடப் பெயர்களை முறையே சார்ந்து சிறப்புப்பொருள் தாராமையின் இம்மூன்றும் சாரியை இடைச்சொல்லேயாம்’ எனவும் நன்னூல் விருத்தி குறிப்பிடுகிறது. (நன். 245)

ஒத்த நூற்பாக்கள்:

‘எல்லாம் என்னும் இறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதியான’           தொல். 189