பக்கம் எண் :

637

‘உயர்திணை யாயின் நம்இடை வருமே’      190

முழுதும்           நன். 245

‘அற்றுஎல் லாம்பெறும் ஆயிடை உம்மை
இறுதியொடு சிவனும் என்மனார் புலவர்.’           மு.வீ.பு. 94

‘உயர்திணை யாயின் நம்இடைத் தோன்றும்.’           மு. வீ. பு. 65

எல்லாரும், எல்லீரும்-சாரியை பெறுதல்

153 எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே.

இது மகர ஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

இ-ள்: எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும் ஆகிய இவற்றின் ஈற்று நின்ற உம்மையைப் போக்கி முறையே தம்முச் சாரியையும் நும்முச்சாரியையும் இடையே வர உருபின் பின்னே உம்முச்சாரியை வந்து புணரும் என்றவாறு.

வரலாறு: எல்லார் தம்மையும்-எல்லார் தம்மொடும் எனவும், எல்லீர் நும்மையும்-எல்லீர் நும்மொடும் எனவும் வரும். பிறவற்றோடும் இவ்வாறே ஒட்டுக. 6

விளக்கம்

எய்தியது - இன்சாரியை

பிறிதுவிதி - எல்லார் என்பது தம்முச்சாரியை பெறும், எல்லீர் என்பது நும்முச் சாரியை பெறும் என்பது.