640 நான்கன் உருபும் ஆறன்உருபும் தன்னக்கு, தன்னது என்றாற்போல இரட்டா என்றார். ஒத்த நூற்பாக்கள்: ‘தாம்நாம் என்னும் மகர இறுதியும் யாம்என் இறுதியும் அதனோ ரன்ன ஆ-எ ஆகும் யாம்என் இறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும். ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்.’ தொல், 188 ‘தான்யான் என்னும் ஆயீர் இறுதியும் மேல்முப் பெயரொடும் வேறுபாடு இலவே.’ 192 ‘ஆறன் உருபினும் நான்கன் உருபினும் கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான’ 161 ‘நும்என் இறுதி இயற்கை ஆகும்’ 187 முழுதும் நன், 247 ‘நும்அத்து இன்னையும் நோக்காது இயலும்’ மு. வீ. பு. 61 ‘தாமும் நாமும் நெடுமுதல் குறுகும்.’ 62 ‘யாம்எம் ஆகும்ஆ ராயுங் காலே.’ 63 ‘ஆறும் நான்கும் இரட்டுதல் இலவே.’ 40 நான் என்ற தன்மை ஒருமைப்பெயர் எழுவாய் வேற்றுமையிலேயே வரும். பிறவேற்றுமையை ஏலாது ஆதலின் அதுபற்றிய செய்தி குறிப்பிடபடப்வில்லை என்பது அறிக. |