642 ஒத்த நூற்பாக்கள்: ‘சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல்திரிபு இன்றே.’ தொல். 183 முழுதும் நன். 250 ‘சுட்டுமுதல் வகரம் அற்றொடு சிவணும்.’ மு.வீ.பு. 57 குற்றுகர ஈற்றுப் பெயர்கள் சிலவற்றிற்குச் சிறப்புவிதி 156-157 அன்சாரியைப்பேறு 156 யாதென் இறுதியும் சுட்டுமுதல ஆகிய ஆய்த இறுதியும் அன்னொடு சிவனும் ஆய்தம் கெடுதல் ஆவயி னான. இது குற்றுகர ஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இ-ள்.: யாது எனவரூஉம் குற்றுகரஈறும், சுட்டினை முதலாக உடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகரஈறும் அன்சாரியையொடு பொருந்தும்; அவ்விடத்து இடைநின்ற ஆய்தம் கெடும் என்றவாறு. வரலாறு: யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு-இதனை இதனொடு-உதனை உதனொடு எனவும் வரும். பிறவற்றொடும் இவ்வாறே ஒட்டுக. விளக்கம் எய்தியது - இன்சாரியைப்பேறு பிறிதுவிதி - அன்சாரியைப்பேறு ஈற்றயல் எழுத்து ஈறு என்றே குறிப்பிடும் தொல்காப்பியனார் மதத்தை உட்கொண்டு, ஈற்றயலெழுத்தாகிய ஆய்தம் பெற்ற சொல்லை’ ஆய்த இறுதி’ என்றார். |