643 அது இது உது என்ற சுட்டுப்பெயர்களும் வேறு, அஃது இஃது உஃது என்ற சுட்டுப்பெயர்களும் வேறு என்பதை. ‘அது இது உது என வரூஉம் பெயரும் அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்’ தொல்.சொல். 169 என்பதனான் அறிக. அஃது முதலியன ஆய்தம் கெட்டு அன்பெறும் எனவே, இயற்கையாகிய அது என்பதும் அன்பெறும் என்பது போதரும். (இ.வி. 157 உரை) எனவே, அது முதலியன அதனை-அதனொடு எனச் சாரியை பெற்று உருபொடு புணரும் என்பதாம். அதனுக்கு என் அன்னொடு உகரச்சாரியையும் கொள்க. (நன். 251 விருத்தியுரை) ஒத்த நூற்பாக்கள்: ‘சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்ஒழித்து உகரம் கெடுமே,’ தொல். 176 முழுதும் தொல். 200 ‘சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடுமே.’ நன். 251 ‘ஆய்தச் சுட்டும் யாதும் அன்பெறும் ஆவயின் ஆய்தம் அழியும் சுட்டே.’ மு. வீ. பு. 72 ‘வவ்விறு சுட்டுஅன் னொடுவரும் என்ப.’ 52 ஆன்சாரியைப்பேறு 157 ஒன்று முதல் எட்டு அளவாம் எண்ஊர் பத்தின்முன் ஆன்வரின் ப-ஒற்று ஒழியமேல் எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே. |