644 இது குற்றுகரஈற்று எண்ணுப்பொருள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இ-ள்.: ஒன்றுமுதலாக எட்டு இறுதியாக நின்ற எண்ணுப்பெயர்களின்மேல் வந்துபஃது எனவும் பது எனவும் முடிந்து நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயர் முன்னர் ஆன்சாரியை வரின், பகரஒற்று நிற்க ஏனைய எல்லாம் கெடும். ஒன்பதன் முன்னர் ஆன்வரினும் இவ்வாறு கெடும், உருபுபுணர்வழி, என்றவாறு. வரலாறு: ஒரு பானை-ஒரு பானொடு எனவும் ஒன்பானை-ஒன்பானொடு எனவும் வரும். பிறவற்றொடும் இவ்வாறே ஒட்டுக. மேல்,’பல்லவை நுதலிய அகர இறுபெயர் அற்றொடு சிவணல்.’ இ. வி. 150 என்று ஒழியாது, ‘எச்சம் இன்றே’ என்ற மிகையானே, இன் பெறுவன பெறாது விளவை-பலாவை என்றாற் போல முடிதலும், மகத்தை-நிலாத்தை எனப் பிறசாரியை பெறுதலும், விளவத்துக்கண்-பலாவத்துக்கண் என அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழன் உருபொடு புணர்வழி அத்துப் பெறுதலும், யா என்னும் ஆகாரஈற்று வினாப்பெயர் யாவற்றை யாவற்றொடு என அற்றுப்பெற்றே முடிதலும். அது இது உது என்னும் முற்றுகர ஈற்றுச் சுட்டுப்பெயர்கள் அதனை அதனொடு-இதனை-இதனொடு-உதனை உதனொடு என அன்பெற்றே முடிதலும், அவை-இவை-உவை என்னும் ஐகார ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் அவையற்றை அவற்றை-இவையற்றை இவற்றை |