645 -உவையற்றை உவற்றை என அற்றுப்பெற்று ஐகாரம் கெடாதும் கெட்டும் முடிதலும், யாவை என்னும் ஐகாரஈற்று வினாப்பெயர் யாவற்றை யாவற்றொடு என ஐகாரம் கெட்டு அற்றுப்பெற்று முடிதலும், கரியவை-நெடியவை என்னும் தொடக்கத்து ஐகார ஈற்றுப் பண்புகொள் பெயர்களும் கரியவற்றை-நெடியவற்றை என அம்முடிபு பெறுதலும், மகர ஈற்றுப்பெயருள் சில மரத்தை மரத்தொடு-நுகத்தை நுகத்தொடு என அத்துப்பெற்றே முடிதலும், கரியேம் நம்மையும் என மகரஈற்றுத் தன்மைப்பெயர் நம்மும் உம்மும் பெற்று முடிதலும், கரியார்தம்மையும் கரியீர்நும்மையும் என ரகரஈற்றுப் படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் முறையே தம்மும் உம்மும்-நும்மும் உம்மும்-பெற்றுமுடிதலும், எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயர் ‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை’ (குறள் 582) தனத் தம்முப் பெறாதும் வருதலும். அழன் புழன் என்னும் னகரஈற்றுப் பெயர்கள் இன்னே அன்றி, அழத்தை, புழத்தை என அத்துப்பெற்று னகரம் கெட்டு முடிதலும், எவன் என்னும் னகரஈற்று வினாப்பெயர் எவற்றை எவற்றொடு என அன்கெட்டு அற்றுப்பெற்று முடிதலும் எற்றை எற்றொடு என அன்னோடு அற்றின் அகரமும் கெட்டு முடிதலும், எகின் என்னும் னகர ஈற்றுப்பெயர் இன்னே அன்றி எகினத்தை என அத்துப்பெற்று முடிதலும், |