பக்கம் எண் :

646

ஏழ் என்றும் ழகரஈற்று எண்ணுப்பெயரும், பூழ் யாழ் என்றல் தொடக்கத்து ழகரஈற்றுப் பொருட்பெயரும் இன்னேயன்றி ஏழனை ஏழனொடு-பூழனை பூழனொடு-யாழனை யாழனொடு என அன்பெறுதலும்,

குற்றுகரஈற்றுள் சில ‘வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான்’ எனவும் கரியதனை-கரியதனொடு எனவும் முறையே அத்தும் அன்னும் பெறுதலும்,

குற்றுகரஈற்று எண்ணுப்பெயர்கள் இன்னே அன்றி ஒன்றனை-இரண்டனை என அன்பெறுதலும், ஒருபஃது ஒருபது முதலியன ஆன்பெறாது ஒருபஃதனை- ஒருபதினை எனவும். ஒருபஃதை-ஒருபதை எனவும் அன்பெறுதலும் இன்பெறுதலும் பெறாமையும்,

குற்றுகரஈற்றுத் திசைப்பெயர்கள் எழன்உருபொடு புணர்வுழி இன்பெறாது, வடக்கண்-கிழக்கண்-மேற்கண்-தெற்கண் என ஈற்று உயிர்மெய் கெட்டு முடிதலும், இன்னோரன்ன பிறவும் கொள்க.

யா-யாவை முதலியன யாவற்றை என ஒருநிகரணவாய் முடிந்தனவேனும், நிலைமொழி வேறுபாட்டான் வேறு என்றே கோடும். 10

விளக்கம்

எய்தியது-இன்சாரியைப்பேறு

பிறிதுவிதி-ஆன்சாரியையும் பிறவிகாரமும் எய்துதல்,

இனி, இவ்வாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளனவற்றிற்கு அடிப்படையாக உள்ள தொல்காப்பிய நூற்பாக்களையும் நச்சினார்க்கினியர் கொண்ட மிகைகளையும் முறையே சுட்டுவாம்,