647 மகத்தை நிலாத்தை ‘பல்லவை நுதலிய’ என்ற நூற்பாவின் ‘எச்சம் இன்று’ என்ற மிகையால் கொள்ளப்பட்டன. தொல். 174 நச். விளவத்துக்கண்-பலாவத்துக்கண் ‘அ ஆ உன்னும் மரப்பெயர்க் கிளவிக்கு அத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே’ 181 என்பது, யாவற்றை யாவற்றொடு ‘யாஎன் வினாவும் ஆயியல் திரியாது,’ 175 என்பது. அதனை அதனொடு-இதனை-இதனொடு-உதனை- உதனொடு ‘சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்ஒழித்து உகரம் கெடுமே.’ 176 என்பது. அவையற்றை இவையற்றை உவையற்றை ‘சுட்டு முதல் ஆகிய ஐஎன் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே’ 177 என்பது யாவற்றை- ‘யாஎன் வினாவின் ஐஎன் இறுதியும் ஆயியல் திரியாது என்மனார் புலவர் ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே.’ என்பது. 178 |