648 கரியவற்றை நெடியவற்றை- ‘யாஎன் வினாவின்’ என்ற நூற்பாவில், வற்றுமிசை ஒற்று என்றுகெடும் வகரத்திற்குக் கேடு ஓதிய மிகையான் கொள்ளப்பட்டன. (178 நச்.) மரத்தை மரத்தொடு-நுகத்தை நுகத்தொடு ‘மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.’ 185 என்பது. கரியேம் நம்மையும்- ‘எல்லாரும் என்னும்’ என்ற நூற்பாவில் படர்க்கைப் பெயரை முன்னிலைக்கு முன்கூறிய மிகையான் கொள்ளப்பட்டது. (191.நச்.) கரியார்தம்மையும் கரியீர் நும்மையும் இவையும் ‘எல்லாரும் என்னும்’ என்னும் நூற்பாவில் படர்க்கைப்பெயரை முற்கூறிய மிகையான் கொள்ளப்பட்டன. (191.நச்.) எல்லார்க்கும்- இதுவும் முற்கூறிய மிகையானே கொள்ளப்பட்டது. (191.நச்.) அழத்தை புழத்தை- ‘அழனே புழனே ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்தது என்ப உணரு மோரே’ (192) என்பது. |