பக்கம் எண் :

649

எவற்றை எவற்றொடு-

‘வஃகான் மெய்கெட’ (122) என்ற நூற்பாவில் ‘ஆகிய பண்பு’ என்ற மிகையான், எவன் என்ற குறிப்பு வினை முற்றுப்படுத்தல் ஓசையால் பெயராகிய வழி வற்றுச்சாரியை பெற்று விகாரமுற்று எவற்றை எவற்றொடு எனவரும். (122-நச்.)

எற்றை எற்றொடு-

‘அழனேபுழனே’ என்றநூற்பாவில் ‘தோன்றல்’ என்ற மிகையான், எவற்றை எவற்றொடு என்று முடிவன வகர உயிர்மெய்கெட எற்றை எற்றொடு என்று ஆயின. (193-நச்)

எகினத்தை-

‘அழனே புழனே’ என்ற நூற்பாவின் ‘ஒத்தது’ என்ற மிகையான், எகினத்தை என அத்துப்பெற்று முடிந்தது. (195-நச்)

ஏழனை-

‘அன்என் சாரியை ஏழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப.’ (194)

என்பது.

பூழனை யாழனை-

‘அன்என் சாரியை’ என்ற நூற்பாவில் சாரியை முற் கூறிய மிகையான் கொள்ளப்பட்டன, 194 நச்.

வழக்கத்தால், கரியதனை-

‘குற்றிய லுகரத்து இறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன்என் சாரியை’      195