பக்கம் எண் :

650

என்ற நூற்பாவின் ‘முற்ற’ என்ற மிகையால் கொள்ளப்பட்டது.

ஒன்றனை இரண்டனை-

‘எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்.’      198

என்பது.

ஒருபஃதனை இருபஃதனை

‘ஒன்று முதலாக’ என்ற நூற்பாவில் ‘ஆன்இடை வரினும் மானம் இல்லை’ என்புழி ‘வரினும்’ என்ற எதிர்மறை உம்மையால் கொள்ளப்பட்டன. 199 நச்.

வடக்கண்-கிழக்கண்-மேற்கண்-தெற்கண்.

‘ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்
ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே.’      201

என்பது.

யா+அற்று-ஐ+யாவற்றை;
யாவை+அற்று+ஐ-யாவற்றை

இவை முடிந்த முடிபு ஒன்றாயின் நிலைமொழிகள் வெவ்வேறு ஆதலின் தனித்தனி விதந்து முடிக்கப்பட்டன.

ஒத்த நூற்பாக்கள்:

‘ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லுங் காலை
ஆன்இடை வரினும் மானம் இல்லை
அஃதுஎள் கிளவி ஆவயின் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.’           தொல். 199