651 ‘ஒன்று முதல்எட்டு ஈறாம் எண்ஊர் பத்தின்முன் ஆன்வரின் ப-ஒற்று ஒழியமேல் எல்லாம் ஓடும் ஒன்பது இற்றே.’ நன். 249 ‘ஒன்று முதல்எட்டு ஈறாம் எண்களை ஊர்ந்து வரும்பத்து ஆனொடு சிவணிப் பகரஒற்று ஒழியமேல் எல்லாம் ஓடும்.’ மு. வீ. பு. 70 ‘ஒன்பதும் ஆனொடு ஒத்து நடக்கும்,’ 71 அதிகாரப்புறனடை 158 இதற்குஇது முடிபுஎன்று எஞ்சாது யாவும் விதிப்புஅளவு இன்மையின் விதித்தவற்று இயலான் வகுத்துஉரை யாதவும் வகுத்தனர் கொளலே. இஃது அதிகாரப் புறனடை கூறுகின்றது. இ-ள்.: இவ்வெழுத்தோத்தினுள் விதித்தற்கு உரியனவற்றை எல்லாம் விதந்து இதனுக்கு இது முடிபு என்று ஒழியாது எல்லாவற்றையும் விதிக்கத்தொடங்கின் வரம்பு இன்றி ஓடுதலான், எடுத்தோத்தானும் இலேசானும் உரையானும் விதித்துப் போந்தவற்றின் இயல்பைப்பற்றி, அதனானே, திறப்படக்கூறாதவற்றையும் திறப்படக்கூறிக் கற்றுவல்லோர் அமைத்துக்கொள்க என்றவாறு. வரலாறு: உவா அப்பதினான்கு, இராஅப்பகல், இறா அவழுதுணங்காய் என ஆகாஈறு அகரம் பெறுதலும் பொன்னங்கட்டி கானங்கோழி என னகரஈறு அம்முப்பெறுதலும், பதினேழு என ஏழ் உகரம் பெறுதலும், அதினை-அவையிற்றிற்கு-விளவினுக்கு-விண்ணுக்கு பல்லுக்கு எனமுறையே அன்னேயன்றி இன்பெறுதலும், |