பக்கம் எண் :

653

இனிச் செய்கையும், புறப்புறச்செய்கையும் புறச்செய்கையும் அகப்புறச்செய்கையும் அகச்செய்கையும் என நால்வகைத்து.

‘இஈ ஐவழி யவ்வும்’       68

என்றால்போல்வன புறச்செய்கை

‘ணன முன் டணவும்’      70

என்றாற்போல்வன புறச்செய்கை

‘ஞணநம லவளன ஒற்றுஇறு தொழிற்பெயர்’      81

என்றால் போல்வன அகப்புறச்செய்கை

இன்னஈறு இன்னவாறு முடியும் எனச்செயகை கூறுவன எல்லாம் அகச்செய்கை இவை எல்லாம் ஓர்ந்து உணர்க. 11

ஐந்தாவது உருபு புணரியல் முற்றிற்று.

விளக்கம்

புறனடை-கூறப்பட்டன அன்றிக் கூறப்படாது புறத்தே அடுத்து வரும் செய்திகளைக் கூறுவது.

உவா அப்பதினான்கு, இராஅப்பகல்

‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி
மெய்ம்மை யாக அகரம் மிகுமே.’           தொல். 223

என்பது, இவை உம்மைத்தொகை.

இறா அவழுதுணங்காய்

இந் நூற்பாவில் வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் இவ்வெழுத்துப் பேறளபெடை கொள்ளப்பட்டது. இதுவும் உம்மைத்தொகை. 223நச்.