பக்கம் எண் :

654

பொன்னங்கட்டி கானங்கோழி

‘உணரக் கூறிய புணரியல் மருங்கின்
கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே.’

(405) என்ற புணரியல் புறனடை யுரைக்கண் னகரஈறு அம்முப் பெற்றதையும்,

பதினேழு

என ஏழ் உகரச்சாரியை பெற்றதனையும்,

விண்ணுக்கு, பல்லுக்கு

என விண்-பல் என்பன உகரச்சாரியை பெற்றதனையும் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.

அதினை

என அது என்பது இன்பெறும் மரூஉ முடிபை.

‘சுட்டுமுதல் உகரம்’      176

என்ற நூற்பா உரையில் சுட்டுகிறார்,

வேயாது வேயாப்பு

என நிலைமொழி யகரம் கெடுதலை’ ஞநமயவ, 144

என்னும் நூற்பாவில் ‘எல்லாம்’ என்பதனால் கொண்டார்.

பண்பு-ஒருபொருள் தோன்றுங்கால் தோன்றி, அது கெடுந்துணையும் கெடாதுநிற்கும் சாதித்தன்மை. ஆஉண்டு என்புழி, பசு ஒன்று இறந்தாலும் அப்பசுவின் எண்ணம் மக்கள் உள்ளத்தில் இருக்குங்காறும். அப்பசு வருக்கமே அழிந்தபோதும், அப்பசுத்தன்மை நிலைத்து இருத்தலின் அது பொருண்மை எனப்படும். அப்பொருண்மையை உண்டு என்னும் பண்பு குறிப்பிடும்.