பக்கம் எண் :

655

தொழில்-சிறிது போது நிகழும் ஒருபொருளின் புடைபெயர்ச்சி.

இறைவன் எப்பொருளின் கண்ணும் உளன் என்பது பண்பு;

மாற்றோர் பாசறை மன்னன் உளன் என்பது தொழில்.
உண்டு+பொருள்-உள்பொருள், உண்டுபொருள்
உண்டு+காணம்-உண்டுகாணம்.
உண்டு+நூல்-மணி-அடை-உண்டுநூல்-மணி-அடை.

உன்பொருள் பண்புத்தொகையாயின், ஒரு திரண்மையாக இடையறவுபடாமல் கூறப்படும்; வினைக்குறிப்புமுற்றுத் தொடராயின் இடையறவுபடச் சொல்லப்படும்.

‘உண்டுஎன் கிளவி உண்மை செப்பின்
முதை இறுதி மெய்யொடும் கெடுதலும்
மேல்நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்
ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து வரூஉங் காலை யான’           தொல். 430

என்பதுவிதி.

புறப்புறக்கருவி-சொற்கள் உண்டாதற்குப் பயன்படும் எழுதுக்களின் பொது இயல்பு கூறுவது.

‘எண்பெயர்’ (இ.வி,2) என்ற நூற்பா எழுத்திலக்கணத்தின் பாகுபாடு கூறுவதாய் அமைவதால் புறப்புறக்கருவியாம்.

புறக்கருவி-எழுதுக்கள் சேர்ந்து மொழியாந் தன்மை மாத்திரம் கூறிப் பின் புணரியலுக்கு நிலைமொழி வருமொழி வகுப்பதற்குப் பயன்படுவது. ஆகவே; பதவியல் புறக்கருவியாம்.