பக்கம் எண் :

656

அகப்புறக்கருவி- நிலைமொழியும் வருமொழியும் பொருள் பொருத்தமுற இயல்பாகவும், திரிந்தும் புணரும் என்றாற்போன்ற புணரியல் பொதுக்கருவிகளைக் கூறுவது ‘மெய்உயிர் முதல்ஈறு’ (53) என்பது.

அகக்கருவி-புணர்ச்சிக்கு இன்றியமையாத நிலை மொழிஈறு பெறும் விதிகளைக் கூறுவது.

‘எகர ஒகரம் பெயர்க்குஈ றாகா’ (97)

முதலியன.

கருவியாவது புணர்ச்சிக்குக் கருவியாக வரும் செய்திகளைக் கூறுவது.

செய்கையாவது பதம்முன் விகுதியும் பதமும் உருபும் புணரும் நிலையையும், சொற்கள் முடியும் நிலையையும் குறிப்பிடுவதாம்-

புறப்புறச் செய்கை - நிலைமொழி வருமொழி இரண்டற்கும் பொதுவான செய்கை- நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் உயிராகியவழி வரும் உடம்படுமெய் போல்வன.

புறச்செய்கை- வருமொழித்திரிபு கூறுவது-வருமொழி தகர நகரங்கள் றகர னகரங்களாகத் திரியும் என்பது போல்வன.

அகம்புறச்செய்கை- நிலைமொழிபெறும் எழுத்துப்பேறு சாரியைப்பேறு என்பனவே கூறுவது-தொழிற் பெயர் உகரம்பெறும் என்பது போல்வன.

அகச்செய்கை-இன்னஈறு இன்னவாரு வருமொழியொடு புணர்ந்து முடியும் என்றுகூறும் ‘இயல்பினும் விதியினும்’ (82) போல்வன.