66 அடங்குமாறு போல, நூலாகிய அவயவியில் சூத்திரம் ஒத்துப்படலம் நூலியல்பு முதலிய அகஉறுப்பும், ஈவோன்தன்மை முதலிய புறஉறுப்பும் அடங்கும் எனல் பொருந்துமே அன்றி, கண்ணாடியாகிய புறஉறுப்பில் கண்ணாகிய அகஉறுப்பு அடங்கும் என்பது பொருந்தாதது போலப் பாயிரம் ஆகிய புறஉறுப்பில் நூல் இயல்பாவது போலப் பாயிரம் ஆகிய புறஉறுப்பில் நூல் இயல்பாகிய அகஉறுப்பு அடங்கும் எனல் பொருந்தாது என்பது. (பா. வி.137, 138ப) யாப்பு, கேட்போர் என்பனவற்றிற்கு முன்னோர் கருத்தொடு முரணி முனிவர் உரைத்தன பொருந்தாக் கருத்துக்கள் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. பாயிரச் செய்திகள் முற்றும். |