பக்கம் எண் :

68

மலை என்பது மங்கல மொழி ஆதலின் முதற்கண் மங்கலம் கூறுதல் மரபு எனக்கருதி மலை என்றும், இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி மலைமகள் ஒருபால் மணந்து என்றும், மலரோன் செயலும் இவன் செயல் என்பார் உலகு அளித்த என்றும், யாவர்க்கும் உயர்ந்தோன் என்பார் தலைவன் என்றும், ‘மனம் மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே’ என்ப ஆகலின், மனத்தால் துணிவு தோன்ற நினைத்தலும், மொழியால் பணிவு தோன்ற வாழ்த்தலும், தலையால் தணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி என்றும், அவ்வாறு வணங்கியோனால் யாதும் முடிவு எய்துதலின் சாற்றுவன் என்றும் ஆகுபெயரான் எழுத்திலக்கணத்தை எழுத்து என்றும் கூறினார், மகளை என்னும் இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது, சூத்திரமும் செய்யுளாகலான்.

விளக்கம்:- அதிகாரம் என்ற சொற்கு முறைமை என்றே நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் பொருள் கூறுவர். அதனையே இவ்வாசிரியரும் பின்பற்றினார் என்பது.

சேனாவரையர், வட நூலார் மதம் பற்றி, ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடு சென்று இயைதலையும், ஒன்றன் பொருள்பற்றி வருகின்ற பல ஓத்துக்களின் தொகுதியையும் அதிகாரம் என்பர். இதனையே சிவஞான முனிவரும், வேந்தன் ஒருவன் தான் இருக்கும் இடத்திலேயே இருந்து ஒரு நாடு முழுதும் தன் ஆணையின் நடக்கச் செய்யுமாறு போல, ஒரு சொல் இருந்த இடத்திலேயே இருந்து பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன் பொருளே நுதலி வரச்செய்யும் எதோத்தேச பக்கம் என்றும், சென்று நடாத்தும் தண்டத்தலைவர் போல, ஓரிடத்துநின்ற சொல்லே பல சூத்திரங்களோடு சென்று இயைந்து பொருள்தரும் காரியகால பக்கம்