பக்கம் எண் :

69

என்றும் அதிகாரம் இருவகைப்படும் என்று விளக்கிக் கூறுவர்.

இவரைப் பின்பற்றியே முத்துவீரிய நூலாரும்,

‘எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகாரத்தை உடையது என அன்மொழித் தொகையாய்ப் படலத்திற்குக் காரணக்குறி ஆயிற்று. அதிகாரம் என்பது அதிகரித்தல்; அஃது இரு வகைப்படும். அவற்றுள் ஒன்று அரசன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுதும் தன் ஆணையின் நடப்பச் செய்வதுபோல், ஒருசொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன்பொருளே நுதலிவரச் செய்வது; ஒன்று சென்று நடாத்தும் தண்டத்தலைவர்போல ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடு சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பது; எழுத்தை நுதலிவரும் பல ஓத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றாயிற்று என்க’ என்றார்.

மொழி ஆக்கம்-எழுத்தினான் ஆக்கப்படும் மொழி
                       பற்றிக் குறிப்பிடும் பதவியல்
                       செய்தி,

செய்கை கூறுவன-உயிர் ஈற்றுப் புணரியல், மெய்
                       ஈற்றுப் புணரியல், உருபு
                       புணரியல் என்ற மூன்றும்.

எண்பெயர் முதலியன இவ்வியல் இரண்டாம் நூற்பாவில் கூறப்படுவன.

‘மலைகள்.........எழுத்தே’ என்பது தற்சிறப்புப் பாயிரம் என்னை?

‘தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
எய்த உரைப்பது தற்சிறப்புப் பாயிரம்’

ஆகலின்.