பக்கம் எண் :

70

இங்ஙனமே நன்னூலார்,

‘பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகற் றொழுநன்கு இயம்புவன் எழுத்தே’,

எனவும், சின்னூலார்

‘பூவின்மேல் வந்தருளும் புங்கவதன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி-மேவுமுடிபு
எல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து’.

எனவும், முத்து வீரியமுடையார்

‘எப்பொருள் வயின்உயிர் எழுந்து மறைகுவது
அப்பொருள் அடிதொழுது அறைகுவன் எழுத்தே’.

எனவும், இங்ஙனமே இலக்கணத்தின் ஓரோர் பகுதியே இயற்றிய ஏனை நூலாரும் தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்த உணர்த்துவது ஆகிய தற்சிறப்புப்பாயிரத்தைத் தத்தம் நூலின் முதல் பாவாக அமைத்துள்ளமை காண்க.

பார்வதி பாகன் ஆகிய சிவபெருமான் அருளால் உலகு தோன்றியது என்ற செய்தியை,

‘நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே’.

என்ற ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப்பாடலும் குறிப்பிடுவது காண்க.

மனம் இவனே பரம்பொருள் என்று துணிவுகொண்டு ஈடுபடுதலும், மொழி அவனையே பரம்பொருளாகக் கொண்டு பணிவொடு பரவுதலும், மெய் அவனையே