பக்கம் எண் :

73

குதல் சிறப்பு வினை ஆவது அல்லது பொதுவினை ஆகாமையின் வணங்கி என்பதும், அவ்வப்பயன் குறித்து வாராமை அறிக. இவ்வாறு மேல் சொல்தொறும் உள்ள குற்றங்களைக் கூறின் விரியும் என்று ஒழிக.

சூறாவளியின் கருத்துப் பொருந்தாது என்பது.

‘அதிகாரம் என்ற வடசொற்கு முறைமை என்ற பொருளும் உண்டு. ஆகலான் நச்சினார்க்கினியர் முதலாயினாரும் அவ்வாறே பொருள் கொண்டனர் ஆதலின் அதிகாரம் என்பதற்கு முறைமை என்று பொருள் கூறியது பொருந்துவதேயாம்.

மலைமகள்: மலையும் மகள் எனவும் அமங்கலப் பொருள் தந்து ‘தொகையார் பொருள் பலவாய்த் தோன்றலின்.’ மலைதல் மங்கலப் பயன் குறித்து வாராமை அறிக’ என்றார்.

நன்னூலார் எடுத்து ஓதிய ‘பூமலி’ என்பது ‘இலை நிறைந்த’ என்றும் ‘இடம் அகன்ற’ என்றும் பொருள் தரத்தக்கது ஆகலின் ‘தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற’ இடம் இல்லையா? ‘நீடாழி உலகம்’ என்று மங்கலம் வகுத்த வில்லிபுத்தூர் ஆழ்வாரை அது ‘நீள் தாழி’ எனவும் பகுக்கக் கிடந்தது என்று குற்றப்படுத்தல் பொருந்துமா?

சிவதருமோத்திரத்தில் மறைஞானசம்பந்த நாயனார்

‘மலைக்கு மகள் பெற்ற மகனைக் கயகமுனை’

என்று கொண்ட மங்கல மொழியாகிய மலை என்பதனை அமங்கலப்படுத்துதல் சாலுமா?

இரண்டாவது ‘மணந்து’ என்பதும் ஒரு குற்றம். என்னை?