75 ‘மனம் மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே’ என்புழி ஒப்புமை பற்றிக் கூறியதேயாம் என்று யாப்பருங் கலக்காரிகை உதாரணப் பாடலுக்கு அமைதி தேடும் முனிவர், ‘மனத்தால் துணிவு தோன்ற நினைத்தலும், மொழியால் பணிவு தோன்ற வாழ்த்தலும் தலையால் தணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி’ என்று கூறிய ஆசிரியர்மேல் குற்றம் சொல்வது என்னை? படைத்தலும் காத்தலும் அழிப்பில் ஒடுங்குவதால் ஒடுக்கத்திற்கே முதலிடம் கொடுப்பது போலவே, நினைத்தலும் துதித்தலும் உட்கொண்டே நடைபெறம் வணக்கத்திற்கு முதல் இடம் கொடுத்தல் வேண்டும். வில் வணக்கம் தீது குறிப்பது போலச் சொல் வணக்கம் நன்மை குறிக்குமே. தொடக்கத்தில் வளைதற் பொருளில் பிறந்த வணக்கம் ஒப்புமை பற்றி இப்பொழுது மனம் மொழி மெய் ஆகிய மூன்றற்கும் செல்லும் என்பது உணர்க.’ என்று திருவாளர் தாமோதரம் பிள்ளையவர்கள் இலக்கண விளக்க நூலார் இந்நூற் பாவுரையாகக் கூறியனயாவும் அமைவுடையனவே என்று நிறுவியுள்ளார். யாப்பருங்கலக் காரிகையின் பாடல்; மந்தா நிலம் வந்தசைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நான் மலர்மிசை எனவாங்கு, இனிதின் ஒதுங்கிய இறைவனை மனம் மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே என்பது. (1) |