பக்கம் எண் :

79

ஊறு உடைமையானும், விசும்பில் பிறந்து இயங்குவது ஒரு தன்மை உடைமையானும், காற்றின் குணமாயது ஓர் உருவாம்; வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவே ஆயிற்று. இதனைக் காற்றின் குணமே என்பது இவ்வாசிரியர் கருத்து; இதனை விசும்பின் குணம் என்பாரும் உளர். இவ்வுரு ‘உரு உருவாகி’ (தொல்-17) எனவும், ‘உட்பெறுபுள்ளி உருவாகும்மே’ (தொல்-14) எனவும் காட்சிப் பொருட்கும் சிறுபான்மை வரும்.

வடிவாவது கட்புலனாகிய நிற்கும். அது வட்டம் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றனை உணர்த்தும், மனத்ததான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவம் காட்டி எழுதப்பட்டு நடத்தலின், கட்புலன் ஆகிய வரிவடிவும் காட்டி எழுதப்பட்டு நடத்தலின், கட்புலன் ஆகிய வரிவடிவும் உடைய ஆயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். ‘எகர ஒகரத்து இயற்கையும் அற்றே’ (தொ.16) என உயிர்க்கும் சிறுபான் வடிவு கூறினார்” என்று கூறிய செய்திகளும்,

‘எழுத்தெனப்படுப’ என்னும் தொல்காப்பிய முதல் நூற்பாவுரையில், “இவ்வெழுத்து எனப்பட்ட ஓசையை அரு என்பார் அறியாதார். அதனை உரு என்றே கோடும். அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடை எறியப் படுதலானும், செவிக்கண் சென்று உறுதலானும், இன்பத் துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவும் கூடிப் பிறத்தலானும், தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்று இடத்தும் நிலை பெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப்பிறக்கும் என்றமையானும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடத்திற் கூறியன இன்மை உணர்க. அல்லாதூஉம் வன்மை மென்மை இடைமை என்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்தல் என்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்றது என்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம்.”