பக்கம் எண் :

81

ஒன்று பல ஆதல் :ஒரே தொடர் மொழியே வெவ்வேறு பொருள்தரும் இரண்டு முலிய வகைகளாகப் பிரிக்கப்படுதல். செம்பொன்பதின்றொடி என்ற தொடரே செம்பொன் பதின்தொடி எனவும், செம்பு ஒன்பதின் தொடி எனவும் இவ்வாறு பிரிக்கப்படுதல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு.

திரிந்ததன்திரிபு அது என்றல் : ஒரு சொல் புணர்ச்சிக் கண் பிறிது ஒரு சொல்லாகத் திரிந்தாலும், அத்திரிந்த சொல்லை அடிப்படைச் சொல் போலவே கொண்டு புணர்ச்சி முடிபு கோடல். முள் என்ற ளகர ஈற்றுச்சொல் வருமொழி முதற்கண் தகரம்வரின், ஈற்று ளகரம் ஆய்தமாகத் திரியும். அங்ஙனம் திரிந்தாலும், முள் என்பது நிலைமொழி ஆகியவழி வருமொழித் தகரம் டகரமாகத் திரிதல் போலவே, முஃ என்பதன் முன்னும் தீது என்பது டீது என்றாகி முஃடீது எனப் புணர்ச்சி முடிபு கொள்ளும் என்பது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு.

திரிந்ததன் திரிபு பிறிது என்றல் : நிலைமொழி இறுதி மெய்யீறு புணர்ச்சிக்கண் கெட, ஈற்றயல் எழுத்தே விதி உயிர் ஈறாய் நின்ற வழி, அச்சொல்லின் முன்பு இருந்த மெய்யீற்றை விடுத்துப் புணர்ச்சிக்கண் விதியீறாய் நிற்கும் எழுத்தையே ஈற்றெழுத்தாகக்கொண்டு புணர்ச்சி விதி கூறல். மரம் என்ற நிலைமொழி கட்டை என்ற வருமொழியொடு புணரும்வழி ‘மவ்வீறு ஒற்றழிந்து’ (எழு-129) என்பதனால் மகரம் கெட, மர என ஈற்று அயல் எழுத்தே ஈற்று எழுத்தாய் நின்றவழி, அவ்விதி உயிர் ஈற்றையே ஈற்று எழுத்தாய்க் கொண்டு, ‘இயல்பினும் விதியினும்’ (எ-82) என்பதனான் வல்லெழுத்து இதற்கு எடுத்துக்காட்டுக்களாம். திரிந்தது-மரம் என்ற சொல்; அதன் திரிபு மர என்ற சொல்; பிறிது- இரண்டும் வெவ்வேறு; மரம் என்பதற்கு உரிய முடிபு மர என்பதற்கு இல்லை என்பது-போல்வன.