பக்கம் எண் :

82

அதுவும் பிறிதும் எனல் : தான், யான், தாம், யாம், நாம், நீ, நீயிர் என்பன உருபு ஏற்கும்போது நெடுமுதல் குறுகி முறையே தன், என், தம், எம், நம், நின், நும் எனத் திரியும், இவை ஆறன் உருபு ஏற்கும் வழி அகரம் சாரியை பெற்று முறையே தன, என, தம, எம, நம, நின, நும என ஆகும். அது என்ற ஆறன் உருபு இவற்றொடு வருமொழியாய் வந்து புணரும் வழி நிலை மொழிகளாகிய தன முதலியவற்றின் முன் வருமொழியாகவரும் அது உருபின் அகரம் கெடும் என்பது ‘ஆறன் உருபின் அகரக்கிளவி-ஈறாகு அகர முனைக் கெடுதல் வேண்டும்’ (தொல்-115) என்பதனால் பெறப்படும். இவ்வாறு நிலைமொழி ஈற்றில் வரும் அகரம் வேறு, வருமொழி முதற்கண் வரும் அது என்ற உருபின் அகரம் வேறு என, ஒன்று போலக் காணப்படும் இரண்டரை வெவ்வேறாகக் கூறுவது போல்வன அதுவும் பிறிதும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

நிலையிற்று என்றல் : நிலைமொழியும் வருமொழியும் பொருள் பொருத்தம் உறப் புணரும் என்பது அதற்குச் சாத்தன் கை, சாத்தன் உண்டான் என்பன போல்வன எடுத்துக்காட்டு.

நிலையாது என்றல்: நிலைமொழியும் வருமொழியும் தழாஅத் தொடராய்ப் பொருள் பொருத்தம் அற ‘இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பின், பரல் அவல் அடைய இரலை தெறிப்ப’ என்ற செய்யுள் அடிகளில் மருப்பின் என்பதும் பரல் என்பதும் தம்மில் பொருள் பொருத்தம் அறத் தொடர்ந்துள்ளமை போலப் புணர்தல்.

நிலையிற்றும் நிலையாதும் என்றல் : ஓர் ஈற்றுச் சொற்களுள் ஒன்றற்குக் கூறிய விதி மற்றொன்றற்குப் பொருந்தாததாதல், ஆகார ஈற்று ஓரெழுத்து மொழியும் குறில்நெடில் மொழியும் அகரம் ஆகிய எழுத்துப்பேறு அளபெடை பெறும் என்று