பக்கம் எண் :

83

‘குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி’           தொல்-226

என்ற விதியான் உரிய அகரத்தை,

இரவுக் காலத்தைக் குறிக்கும் இரா என்ற சொல் பெறாது என்பது,

‘இராஎன் கிளவீக்கு அகரம் இல்லை’.           தொல்-227

என்ற விதியால் விலக்குதல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு.

இந்நூலில் புணர்ச்சிச் செய்திகளை எளிமையாகத் தெரிவித்தல் வேண்டும் என்ற கருத்தான் அதுவும் பிறிதும் என்பதும், நிலையிற்றும் நிலையாதும் என்பதும் இடம் பெறவில்லை. ஒழிந்தனவாகிய ஒன்று பல ஆதல் முதலிய ஐந்தும் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் சார்பெழுத்துக்களைக் கூறுமிடத்து இவ்வாசிரியர் எழுத்துக்களுடைய குறைவும் கூட்டமும் பிரிவும் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். பெயர் முறை என்பனவற்றை விளக்குமிடத்து இணம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

உயிரீற்றுப் புணரியல் முதலிய மூன்றனுள்ளும் (ஒன்று பல ஆதல், திரிந்ததன் திரிபு அது என்றல், பிறிது என்றல், நிலையிற்று என்றல் : நிலையாது என்றல்) என்ற ஐந்தும் ஆட்டாண்டுக் குறிக்கப் பெற்றுள்ளன.

இலக்கண விளக்கச் சூறாவளி

எண்ணுதற்கும் பெயர் கருவியாதலின் அதனை முற் கூறாதது முறை அன்று; எண்ணும் முறையும் போல்வனவற்றால் ஒரு பயன் இன்மையின், அவற்றை வகையுள் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கூற்றாமாறு அறிக.