பக்கம் எண் :

84

போலி எழுத்து என ஒன்று இல்லை என்பது தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுள் காண்க.

அமைதி

இக்கூற்று முனிவர் உரைவரைந்த நன்னூலுக்கும் மறுப்பாக அமைதலின், நன்னூலைப் போற்றி இந்நூலைக் குறை கூறுதல் போலி மறுப்பாம்.

எழுத்து என்ற பொதுப் பெயரைத் தலைப்பில் இட்ட பிறகே எண் கூறலானும், எழுத்ததிகாரத்தில் எழுத்தின் நெடுங்கணக்கு முறையினைக் காரணத்தொடு விளக்கிக் கூறுவதுபின் புணர்ச்சிக்குப்பயன் தருதலானும் அவற்றைக் கூறலும் பயன்உடைய செயலேயாம் என்க. போலி பற்றி அந்நூற்பா உரையில் காண்க.

ஒத்த நூற்பாக்கள்:

‘எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை
முதல்ஈறு இடைநிலை போலி என்றா
பதம்புணர்ப் பெனப்பன் னிருபாற்று அதுவே’           நன்-57

‘எண்ணும்பெயரும் முறையும் இயன்றதன்பின்
நண்ணிவரு மாத்திரையும் நற்பிறப்பும்-கண்ணா
வடிவும் புணர்ச்சியும் ஆயவோர் ஏழும்
கடிஅமரும் கூந்தலாய் காண்’.           நே. சிறப்புப்பாயிரம்

‘தோற்றமும் வகுப்பும் தோன்றும் விகாரமும்
சாற்றுளித் தோன்றும் தான்எழுத்து இயல்பே’           தொ.வி-2