பக்கம் எண் :

85

‘முதல் சார்பு உயிரே மூவினம் மெய்யே
முதற்கண் எழுத்தே மொழிஈற்று எழுத்தே
உயிர்மெய் குறில்நெ டிலோடு ஆய்தம்
ஆறு குறுக்கம் அளபெடை இரண்டும்
மாத்திரைப் புணர்ப்புஎன வகைப்படும் எழுத்தே’.           தொ.வி. 4

எழுத்திலக்கணமும் எழுத்து வகையும்

‘மொழிக்கா ரணமாம் நாதகா ரியஒலி
எழுத்துஅது முதல்சார்பு எனஇரு வகைத்தே’.

இதுமேல் எழுத்து என்றது இன்னது என்பதூஉம் அதன் பகுதியும் உணர்த்துகின்றது.

(இ-ள்.)மொழிக்கு முதற்காரணம் ஆகியும் நாதத்தினது காரியம் ஆகியும் வரும் ஓசை எழுத்து எனப்படும். அவ்வெழுத்து முதல் எழுத்தும் சார்பு எழுத்தும் எனஇரு பகுதியை உடைத்தாம் என்றவாறு.

எழுத்து ஓசை காரணம் ஆமாறும் மொழி காரியம் ஆமாறும், நாதம் காரணம் ஆமாறும் எழுத்து ஓசை அதன் காரியம் ஆமாறும், பதவியல் உள்ளும் பிறப்பியல் உள்ளும் முறையே காண்க.

கடல் ஒலி சங்கு ஒலி முற்கு வீளை இலதை முதலிய ஒலிகள் எழுத்து எனப்படா; அவை மொழிக்கு காரணம் ஆகாமையின்.

விளக்கம் : மேல் எழுத்து என்றது-முதல் நூற்பாவில் காட்டப்பட்ட எழுத்து.

இவ்வாசிரியருக்கு இறைவனுடைய மாயையின் காரியமே உலகம் என்பது கருத்து ஆதலின், மாயையின் செயலாகிய நாதத்தை எழுத்தொலிக்கு முதற்காரண