பக்கம் எண் :

86

மாகக்கொண்டார், நாதத்தின் காரியமாகிய எழுத்தொலி சொல்லுண்டாதற்குக்காரணமாய்ப்பின்னர் அமைந்தது.

நன்னூலார் சமணர் ஆதலின் அவருக்கு மாயை உடன்பாடு அன்று. நாம் இவ்வுலகம் நிலையற்றது என்ற கருத்தான் ‘மன்னா உலகம்’ என்று கூறவும். சமணர் ‘மூவா முதலா உலகம் ‘ என்று கூறுவர். சிதலது நிர்வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்று உரு அமைந்த பெற்றியைப் போல உலகில் காணப்படும் ஐம்புலம் பேருரு எல்லாம் நிலம் நீர் தீக்காற்று விசும்பு என்ற ஐந்து அணுக்கள் பலவாகக்கூடும் கூட்டத்தினாலேயே உண்டாகின்றன. அவை அழியும்போது அவற்றில் கலந்துள்ள ஐந்து அணுக்களும் தனித்தனியே பிரிந்து தத்தம் அணுக்களோடு சேர்ந்துவிடுகின்றன ஆதலின் உலகில் அழிவு என்பதே இல்லை என்று கொள்ளும் சமணர்கள் ஒலி அணுக்களே மொழி தோன்றுவதற்குக் காரணமாகிய எழுத்தின் தோற்றத்திற்குக் காரணம் என்றனர். மயிலைநாதர் சிறப்புடைமை பற்றி ஒலியெழுத்தை எடுத்து ஓதினார் என்பர். உணர்வு எழுத்து முதலான விகற்பமெல்லாம் அதிகாரப் புறனடையால் கொள்க என்றார். ‘பொருள்முதல் ஆறோடு’ நன்-289 என்ற ஆகுபெயர் நூற்பாவால் மயிலைநாதர் எழுத்து என்பது அப்பொருளை உணர்த்தின் இயற்பெயராம். இவ்வதிகாரம் எழுத்து என அதனைச் சொல்லும் அதிகாரத்தை உணர்த்தின் ஆகு பெயராம் என்பர்.

எழுத்தாவது கண்முதலாகிய பிறவற்றிற்குப் புலனாகாது செவிப்புலனே ஆகும் ஒலிவடிவும், செவிமுதலாய பிறவற்றிற்குப் புலனாகாது கண்ணுக்கும் மெய்க்கும் புலனாகும் வடிவடிவை உடைத்தாய்த் தனித்து நின்றாயினும் சார்ந்து நின்றாயினும் தன்னை உணர்த்தலுடன் பொருள் உணர்த்தும் சொல் ஆகலும் அச்சொல்லுக்கு உறுப்பு ஆகலும் ஆகிய இருதன்மையும் ஒருங்கு பெற்றா