87 யினும் அன்றி உறுப்பாக இயைதல் தன்மை ஒன்றே பெற்றாயினும் நிற்கும் ஒலியாம் என்பர் சண்முகனார். (பா. வி -170ப). எழுத்து. அ ஆ முதலியவற்றிற்குப் பொதுப் பெயர் என்பர் சாமிநாததேசிகர். (இ. கொ. 86. உரை) எழுத்து என்னும் தொழிற் பெயர் அப்பொருளை விட்டுப் பால்பகா அஃறிணைப் பொருட் பொதுப் பெயராய், அப்பொருளைவிட்டு ஓவியம் முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை உணர்த்தும் சிறப்புப்பெயராய், அப்பொருளை விட்டு அவ்வொலியினது இலக்கணத்தை உணர்த்தும் இருமடி ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்விலக்கணத்து உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடி ஆகுபெயராய், அப்பொருளை விட்டு இங்ஙனம் கூறிற்று எழுத்து எனக் கருமகருத்தாவையும், இங்ஙனம் அறிவித்தது எழுத்து எனக் கருவிக் கருத்தாவையும், உணர்த்தும் வழி நான்மடி ஆகுபெயராய் நின்று பல பொருள் பட்டது காண்க. (இ. கொ. 86 உரை) எனவே எழுதப்படுதலின் எழுத்து என்பதே இவர் கருத்தாம். முற்கு-முக்குதல் வீளை-சீழ்க்கை அடித்தல் இலதை-ஒரு வகை ஒலிக்குறிப்பு. இவை எழுத்து அல்லாத ஓசையே என்று உணர்க. ஒத்த நூற்பாக்கள்: “மொழிமுதல் காரணம் ஆம்அணுத் திரள்ஒலி எழுத்துஅது முதல்சார்பு எனஇரு வகைத்தே.’ நன்-58 |