89 ஒத்த நூற்பாக்கள் : எழுத்தெனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப. தொல். 1 ஒளகார இறுவாய்ப்- பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. தொல். 8 னகரா இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப. தொல். 9 அறிந்து எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகள் ஆவன; கம்முன், பிறந்த பதினெட்டும் மெய்; நடு ஆய்தம். வீர.-1 “ஆவி அகரமுதல் ஆறிரண்டாம் ஆய்தம் இடை மேவும் ககரமுதல் மெய்களாம்-மூவாறும் கண்ணும் முறைமையால் காட்டியமுப் பத்தொன்றும் நன்ணுமுதல் வைப்பாகும் நன்கு” நேமி-1 வீரசோழிய நூலாரும் நேமிநாத நூலாரும் உயிர், மெய் இவற்றுடன் ஆயுதத்தையும் சேர்த்து, முதலெழுத்து முப்பத்தொன்று என்றனர். ‘உயிரும் உடம்பும் ஆம் முப்பதும் முதலே’. நன்.59 ‘அம்முதல் ஈராறு ஆவி கம்முதல் மெய்ம்மூ வாறுஎன விளம்பினர் புலவர்’. நன்.63 ‘முதல் எழுத்து உயிர் ஈராறுஉடல் மூவாறே’ தொ.வீ. 5 ‘உயிர்உடல் எனமுதல் ஓர்இரு வகைய’ மு.வீ.எ. 5 ‘அகரம் முதல் உயிர் ஆறிரண்டு ஆகும்’. 6 ‘அச்சுஆவி சுரம்பூத மாம்உயிர் என்ப’. 7 ‘ககரம்முதல் மூவாறும் காத்திரம் ஆகும்’. 8 ‘ஊமையும் ஒற்றும் உடல்எனப் படுமே’. 9 |