91 அவைதாம், குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன. தொல்.2 என இவ்வாறு முதல் சார்புஎன வகுத்துக்கொண்டவற்றுள் இவை மூன்றும் சார்பு எழுத்து என்ற ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஏனைய ஆறனையும் பின்னர் ஒருவாற்றான் தழுவுதலானும், மூன்றாவது ஒரு பகுதி இன்று ஆதலானும், முதல் எழுத்தாம் தன்மை இவற்றிற்கு இன்மையானும், சார்பில் தோன்றுதலானும் இவ்வாறனையும் அவற்றொடு தலைப்பெய்து ஒன்பதும் சார்பின் பால என்றார் இவ்வாசிரியர் என்பது. அற்றேல், ஆசிரியர் செய்யுளியலுள் கூறிய ஒற்று அளபெடையை இவர் ஈண்டுக் கூறியது என்னை எனின், அவர் எதிரது போற்றி ஐகாரக் குறுக்கம் முதலியவற்றை எழுத்து ஒத்தினுள் உரைத்தாங்கு உரைத்தது என்க. ஆய்தக் குறுக்கம் ஒன்று உளது என்றும் அதனொடு கூடச் சார்பெழுத்துப் பத்தாம் என்றும், அதன் விரித்தொகை முந்நூற்று அறுபத்து ஒன்பதாம் என்றும் கூறுவாரும் உளராலோ எனின், ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே’. (தொல். 38) என ஒருமொழிக்கண் வரும் ஆய்தம் கூறி, ‘ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும்’. (தொல். 39) என நிலைமொழி ஈறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தும் கஃறீது முஃடீது எனத்தன் அரைமாத் |