92 மாத்திரையே இசைக்கும் தன்மை தோன்றும் என ஆசிரியர் தொல்காப்பியுனார் அதனைப் புணர்மொழிக்கண் வரும் ஆய்தமாகக் கூறினமையான் ஆய்தக் குறுக்கம் ஒன்று இன்று எனவும், இன்றாகவே சார்பெழுத்துப் பத்தாம் என்றல் பொருந்தாது எனவும், உயிர்மெய் ஒழித்து ஏனைய எல்லாம் இடவேற்றுமையான் அன்றி எழுத்து வேற்றுமையான் அங்ஙனம் பல்காமையின் சார்பு எழுத்து முந்நூற்று அறுபத்து ஒன்பதாம் என்றல் நிரம்பாது எனவும் மறுக்க. இன்னும் இடை ஒற்றுக்கள் டகர றகரங்களொடு தொடராமைக்கு அவர் மெய்மயக்கம் கூறிய சூத்திரங்களே கரியாகலின், குற்றிகரக் குற்றுகரங்கட்கு அவ்விட வேற்றுமையும் சாலாமை அறிக. விளக்கம் : ‘உயிர்மெய் ஆய்தம் உயிரளவு ஒற்றளவு அஃகிய இஉ ஐஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்’. (நன். 59) ‘உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு உயர் ஆய்தம் எட்டுஉயிர் அளபுஎழு மூன்று ஒற்று அளபெடை ஆறேழ் அஃகும் இம்முப் பானேழ் உகரம் ஆறாறு ஐகான் மூன்றே ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறுவிரி ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப’. (நன். 60) எனச் சார்பெழுத்து வகையான்பத்து என்றும், விரியான் உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு, முற்றாய்தம் எட்டு, உயிரளபெடை இருபத்தொன்று, ஒற்றளபெடை நாற்பத்திரண்டு குற்றியலிகரம் முப்பத்தேழு, குற்றியலுகரம் முப்பத்தாறு, ஐகாரக்குறுக்கம் மூன்று, ஒளகாரக் குறுக்கம் ஒன்று மகரக்குறுக்கம் மூன்று ஆய்தக் குறுக்கம் ஒன்று ஆக முந்நூற்று அறுபத்தொன்பது என்றும் நன்னூலார் குறிப்பிட்டுள்ளார். இக்கணத்திற்கு விளக்கம்தர |