பக்கம் எண் :

94

‘ஓர்அளபு ஆகும் இடனுமார் உண்டே
தேருங் காலை மொழிவயி னான.’      57

என்ற நூற்பாக்களான் ஐகாரக் குறுக்கமும், இந்நூற்பாக்களின் ‘மெய்பெற’ ‘தேருங்காலை’ என்ற மிகையானே ஒளகாரக் குறுக்கமும்,

‘அரைஅளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை.’     13

‘செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகாரம் மகாரம் ஈரொற்று ஆகும்.’      51

‘னகாரை முன்னர் மகாரம் குறுகும்.’      52

‘வகாரம் மிசையும் மகாரம் குறுகும்.      330

என்ற நூற்பாக்களால் மகரக்குறுக்கமும் நேர்ந்தார் ஆதலின் அவற்றையே இவ்வாசிரியரும் கொண்டுள்ளார்.

ஒருமொழி ஆய்தமும் தொடர்மொழி ஆய்தமும் குறிப்பிட்ட தொல்காப்பியனார் தொடர்மொழி ஆய்தம் மாத்திரை குறுகும் என்று கூறாமையானும், செய்யுட் கண்ணும் அது குறைஒலித்து ஆதல் செவி கருவியாக உணரப்படாமையானும் இவ்வாசிரியர் ஆய்தக்குறுக்கம் கொண்டிலர்.

இடவேற்றுமையான் அன்றி எழுத்து வேற்றுமையால் அங்ஙனம் பல்காமை என்பது:

உயிர் அளபெடை எழுத்து ஏழு. அதனை மொழி முதல் இடை கடை என்ற மூன்றிடத்தும் வைத்து முரணிக் கொண்ட தொகை இருபத்தொன்று. ஒற்றளபெடை எழுத்துப் பதினொன்று. அதனை மொழியிடையும் இறுதியும் குறிற் கீழும் குறிலிணைக்கீழும் வைத்து முரணி எவ்வாற்றானும் ஈறாக வாராத ஆய்தம் இரண்டனை விடுத்துக் கணக்கிட்ட தொகை நாற்பத்திரண்டு.