பக்கம் எண் :

96

முதல் எழுத்துக்களே தம்மோடு தாம் சார்ந்தும், இடம் சார்ந்தும் பற்றுக்கோடு சார்ந்தும் வருதலான் சார்பு எழுத்து எனக் காரணக்குறி ஆயிற்று எனின், அஃது ஆய்தத்திற்குப் பொருந்தாமையின் அவ்வியாத்திக் குற்றமும், ஆல் கால் என்பன தம்மோடு தாம் சார்ந்து வருதலின் அதிவியாத்திக்குற்றமும் ஆமாறு காண்க.

இடவேற்றுமையால் குற்றுகரம் முப்பத்தாறு ஆதல்சாலும் என்பதும் விருத்தியுள் காட்டினாம்.

அமைதி

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து மூன்று எனக் கருவி செய்தார் ஆகலின், இவ்வாசிரியர் செய்யுளியலும் நோக்கிச் சார்பெழுத்துப் பத்து எனக் கருவி செய்தார் என்பதும் உய்த்துஉணர்க-என்று தாம் உரை வரைந்த காலையும் அதற்கு முன்னும் செய்யுளியலே இல்லாத நன்னூலுக்கு அமைதி கூறும் முனிவர், சார்பெழுத்தை மூன்றற்கு மேலும்கொள்வது செய்யுளியலை நோக்கியே என்பதனைத் தம் உரையுள் உய்த்து உணர வைத்த இந்நூலாசிரியர் கூற்றினைக் கோடற்கண் தடை என்ன?

முதல் எழுத்துக்களே ...................... காண்க :

சார்பெழுத்துக்களுக்கு மயிலைநாதரும் இவ்வாசிரியரும் கூறும் விளக்கம் இது. ‘வேற்றுமை என்பதுபோல இது மிகுதிபற்றி வரையப்பட்டவிளக்கமாகும் அவற்றுள் தம்மொடு தாம் சார்ந்து சார்பு எழுத்தாயின இவை, இடம் சார்ந்து சார்பெழுத்து ஆயின இவை, இடனும் பற்றுக்கோடும் சார்ந்து சார்பெழுத்தாயின இவை என்பதனை இவ்வாசிரியர் விளக்கிக் கூறும் முகத்தான் எவை எவை தம்மொடு தாம் சார்ந்து சார்பெழுத்தாயின முதலியவற்றை விளக்கிச் சொல்வார். ஒன்றற்கே இவ்வெல்லா இலக்கணமும் கூறாமையின் முனிவர் கூறும் குற்றம் இவர்மாட்டு இல்லையாதல் காண்க. குற்றியலுகரம் பற்றி விரிச்சூத்திரத்துள் காண்க.