98 ‘இகரம் குறுகி வரும்குற் றுகரம்பின் யவ்வரினே.’ வீ.3 ‘....ஒன்றரை ஆகும் ஐஒள.’ வீ.5 ‘ம-முன்வயின்கால் வவ்வரின்.’ வீ, ச, 19 ‘ஓங்குயிர்கள் ஒற்றின்மேல் ஏறி உயிர்மெய்யாய் ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும்-பங்குடைய வல்லொற்று மெல்லொற்று வருக்கம் அளபெடைகள் சொல்லொற்றி நீட்டத் தொகும்.’ நே.3 ‘தொடர்நெடில்கீழ் வன்மைமேல் உகரம் யப்பின்பு அடைய வரும்இகரம் அன்றி-மடநல்லாய் மும்மைஇடத்து ஐஒளவும் குன்றும்முன் ஒற்றுஉண்டேல் செம்மை உயிர்ஏறும்செறிந்து.’ நே.4 ‘காலம் குறுகும்மவ் வாய்தம்.’ நே.5 ‘உயிர்மெய்..............சார்பெழுத்தாகும்.’ நன்.60 ‘உயிர்மெய்...................எழுபான் என்ப.’ நன். 61 ‘சார்பெழுத்து உயிர்மெய் தனிஆய் தத்தொடு அஃகிய இஉ ஐஒள மவ்வாய்தம் உயிரளபு ஒற்றளபு ஒருபஃது என்ப.’ தொ.வி. 5 ‘சார்பு உயிர்மெய் தனிநிலை இருபாலன.’ மூ. வீ. எ. 22 ‘புல்லல் சார்தல் புணர்தல்சார்பு எனவே.’ ,, 33 உயிர் எழுத்துக்கள் 6. அ இ உ எ ஒக்குறில் ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில் அஇ உஇவை மொழிமுதல் வரின்சுட்டு எயா முதலும் ஆஓ இறுதியும் ஏஇரு வழியும் வினாவென வழங்கும் என்ப. |