சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

100 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கருத்து உடையவர் ஆயினும், தொல்காப்பியர் கருத்தை ஒட்டியே தாம் சேறல் வேண்டும் என்ற எண்ணத்தால் ‘பன்மை சுட்டிய பெயர்அலங் கடையே’ என்று உரைத்து பொருந்துமாறில்லை.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே’.
 

தொல்.சொல்.180
 

  ‘ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.’
 

181

  ‘ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.’
 

183

  ‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா
ஆங்கு விரவுப் பேர்.......... .......’
 

நே. சொல்.37

  ‘ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும்.’
 

நன். 284 மு.வீ.பெ-33.

  தொல்காப்பிய நூற்பாக்களையே சிறிது திரித்து முத்துவீரியம் கூறும்
 

-மு.வீ.பெ. 34, 35, 37
 

பன்மைப் பெயர் பாலுணர்த்துமாறு
 

186

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
என்றுஇப் பாற்கும் ஒரன் னவ்வே.
 

இது பன்மைப்பெயர் இருதிணையும் பற்றிப் பால் உணர்த்துமாறு கூறுகின்றது.

இ-ள் பன்மை சுட்டிய மூன்று பெயரும் அஃறிணை ஒருமையும் அத்திணைப்
பன்மையும் உயர்திணை ஒருமையும் என்று சொல்லப்படும் மூன்று பாற்கும் ஒத்த உரிமை
என்றவாறு.