சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-28101

வரலாறு: யானை வந்தது வந்தன வந்தான் வந்தாள் எனவும், நெடுங் கழுத்தல்
வந்தது வந்தன வந்தான் வந்தாள் எனவும், பெருங்கால்யானை வந்தது வந்தன வந்தான்
வந்தாள் எனவும் வரும், பன்மை சுட்டிய பெயர் என்றது, ஒருமை சுட்டுதலொடு இயைபு
நீக்காது, தன்னொடு இயைபின்மை மாத்திரம் நீக்கித் தலைமை பற்றி வந்தடுத்த ‘பன்மை
சுட்டுதல்’ என்னும் விசேடத்தான் விசேடிக்கப்பட்டுத் தலைமை பற்றிய வழக்காய் நின்றது;
ஆதீண்டு குற்றி என்றது மேதி முதலிய தீண்டுதலொடு இயைபு நீக்காது, தன்னொடு
இயைபுஇன்மை மாத்திரம் நீக்கித் தலைமை பற்றி வந்தடுத்த ஆதீண்டுதல் என்னும்
விசேடத்தான் விசேடிக்கப்பட்டுத் தலைமை பற்றிய வழக்காய் நின்றாற்போல, பன்மை
சுட்டுதற்குத் தலைமை, ஆண்மை சுட்டிய பெயர் முதலிய மூன்றானும் ஒருகால்
சுட்டப்படும் ஒன்றும் ஒருவரும் போலாது இப்பெயரானே சுட்டப்படும் உரிமை
உடைமையாற் கொள்க. பல பால்களையும் சுட்டி நின்றலின் பன்மை சுட்டிய பெயர்
என்றாலோ எனின், ஒருமைப் பெயர் முதலியனவும் பல பால்களையும் சுட்டி நிற்றலின்
அவற்றையும் பன்மை சுட்டிய பெயர் எனல் வேண்டும் ஆகலின் ஆகா என மறுக்க.
 

விளக்கம்
 

பொதுச் சொல்லுக்குத் தலைமை பற்றியும் பன்மைபற்றியும் பெயரிடும் வழக்கத்துள்,
தலைமைபற்றி ஆஉரிஞுதலால் ஆதீண்டு குற்றி என்று பெயரிடப்பட்டவாறு போல,
ஏனைய ஆண்மைப்பெயர் முதலியவற்றால் உணர்த்தப்படாத அஃறிணைப்
பன்மையைத்தான் ஒன்றுமே சுட்டும் சிறப்புப் பற்றிப் பன்மை விரவுப்பெயர் என்று
இடப்பட்ட பெயர்ஏனை ஒருமைப் பெயரொடு இயைபு நீக்காது, வெண்குடைப்
பெருவிறல் வழுதி என்புழி,வழுதிக்கு வெண்குடையோடு இயைபின்மை மாத்திரை
நீக்கப்பட்டவாறு போலப்பன்மையோடு இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம்
அடுத்து வந்த பெயராம்என்று தொல்காப்பிய உரையாசிரியர் பலரும்
உரைத்தாங்குத் தாமும் உரைத்தார்.