என முறைப்பெயர் மூன்று இடங்களையும் சுட்டி வரும் சொல்லாதலும் அறிக.தொல்காப்பியனாருக்கு மிகப்பிற்பட்ட இந்நூலாசிரியர், தொல்காப்பியனார் காலம் போலாது, தம் காலத்தில் கள்ஈறு உயர்திணைக்கண் மிகுதியும் வருதலை உணர்ந்தவராய்ப் பலர்பாற் பெயர்கள் கள்ஈறு மொழியாய் வருதலையும் விளக்கியவராவர். அங்ஙனம் ஆகவும் கோதைகள் இவர்- கோதைகள் இவை- என்றாற்போன்ற சொல்லமைப்பு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்து இல்லையாகவே, ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும் நிலையைப் பன்மை சுட்டிய பெயர் ஏலாது என்று கொண்டு அவர் விலக்கிய திறத்தை நன்கு உணர்ந்த நன்னூலார், தம் காலத்திற்கு ஏற்ப விரவுப்பெயர் யாவும் ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும்’ (நன்.284) என மொழியமைப்பின் வளர்ச்சி கண்டு கூறியுள்ளார். இவ்வாசிரியர் ‘புதியன புகுத்தலும் வழுவல’ (இ.வி.371) என்ற |