சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-28103

பெயர் எனப்படுவன அல்லது, பன்மை சுட்டிய பெயர் எனப்படா ஆகலான் என்க.

அற்றேல், அவற்றைச் சின்மை சுட்டிய பெயர் எனவே அமையும் பிற எனின்,
அவற்றுள் ஆண்மை சுட்டுதல் முதலிய பகுப்பு உண்மையின் அவற்றைப் பகுத்துக்கூறல்
வேண்டுதலான் அமையாது என்க.

இக் கருத்தே பற்றி அன்றே பஃறொடை வெண்பா என்றாற்போல
ஏனையவற்றையும் பஃறொடை வெண்பா எனக் கூறாததூஉம், பகுப்பு உண்மையின்
சிஃறொடை வெண்பா என்று ஒழியாததூஉம், பஃறாழிசைக் கொச்சகம் என்பதனை
நோக்கி அதனின் குறைந்ததனைப் பகுப்பு இன்மையின் சிஃறாழிசைக் கொச்சகம் என்றே
போந்ததூஉம் என்க.

இனி இவ்வாறன்றி ஆண்ஒருமை பெண்ஒருமை அஃறிணை ஒருமை என்ற
மூன்றும் ஒருமைப்பால் என ஒன்றாய் அடங்குதலின் பல பால்களையும் சுட்டி நின்றன
அல்ல ஆகலான் அம் மூன்று ஒருயைும் சுட்டும் பெயர்களை ‘ஒருமை சுட்டிய பெயர்’
எனவும், இஃது ஒருமையும் பன்மையும் என்னும் இருபாலும் சுட்டி நிற்றலான் ‘பன்மை
சுட்டிய பெயர்’ எனவும் கொள்ளினும் இழுக்காது.

இனி, ஒருமை சுட்டியபெயர் மூன்றும் இருதிணையினும் பன்மை சுட்டாது
ஒருமையே சுட்டியவாறு போலப் பன்மை சுட்டிய பெயரும் இருதிணைக்கண்ணும் பன்மை
சுட்டுவது அல்லது ஒருமை சுட்டுதல் பொருந்தாது எனக்கொண்டு கள் என்விகுதி
இருதிணைப் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் இருதிணை ஒருமைக்கும் பொதுவாய்
நிற்கும் முதற்பெயர் முதலிய மூன்றனோடு அவ்விகுதியைத் தலைப்பெய்து அவற்றைப்
பன்மை சுட்டிய பெயர்க்கு உதாரணமாகக் கொள்ளின்படும் இழுக்கு என்னை எனின்,
தாய் தந்தை முதலிய முறைப்பெயரும் கள் விகுதியோடுகூடி