| தூங்கித்தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என தாங்குபு தழுவிக் கொண்டு தன்னைத்தான் பழித்தது அன்றே எனவும், | சீவக.2723 |
| ‘பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக் காவலன் மடந்தை நெஞ்சம் கல்கொலோ இரும்புகொல்லோ யாவதும் உருகாது என்றும் தவறிலன் அருளம் செம்பொன் பாவைஎன்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே’ சீவக. 2510 |
எனவும் வரும் செய்யுட்களான் அவை பேசியவாறு காண்க. |
விளக்கம் |
, | மேல் என்றது 183 ஆம் நூற்பாவினை. ‘நுமர் எங்கும்’ என்பது பேய் பேசியதற்கும் ‘மூன்றைந்தின்’ என்பது பூதம் பேசியதற்கும் ‘ஈங்கு நீ’ என்பது குரங்கு பேசியதற்கும் ‘பூவையும் கிளியும்’ என்பது கிளியும் நாகணவாய்ப் பறவையும் பேசியதற்கும் முறையே காட்டப்பட்ட மேற்கோள் என்பது கொள்க.
முன்னிலையை விரவுத்திணை என்று கொண்ட தொல்காப்பியனார்,
‘எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்........... |
அன்ன இயல’ தொல்.சொல் 164 என எல்லீரும் என்பதனை மாத்திரம் உயர்திணையாகக் கொண்ட செய்தி இலக்கியம் கண்ட அதற்கு இலக்கணம் இயம்பியதாகவே கொள்ளப்படும். தொல்காப்பியனாரும் நேமிநாதநூலாரும் உண்மையை உயர்திணையாகக் கொண்டனர்; நன்னூலாரும் |