வாசிரியரும் முத்துவீரியம் உடையாரும் தன்மையை விரவுத் திணையாகவே கொண்டுள்ளனர் என்பதை நோக்குக. | சூறாவளி | | ‘பேய்பூதம் மந்தி கிளிபூவை பேசுதலான் ஆகுமே தன்மை பொது’ | என்பதே பற்றித் தன்மையை விரவுத்திணை எனச் சாதித்து, ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் அறியாமை ஏற்றினார். பேய் பூதம் தெய்வச்சாதி ஆதலான் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி’ என்பதனுள் அடங்கும் ஆகலானும், மந்தி பேசுதல் யாண்டும் இன்மையின் ‘ஈங்கினி எம்மை நோக்கி, என்றாற் போல்வன புனைந்துரை வகையான் கூறியது; உண்மை பற்றிக் கூறியது அன்று ஆகலானும், கினி பூவை கூறியவாறு கூறுதல் அல்லது இச்சொல்லை இவ்வாறு கூறவேண்டும் எனச் சொல்லுண்மை அறிந்து கூறுதல் உலகத்து இன்மையான் ‘பூவையும் கிளியும் கேட்டு’ (சீவக.2510) என்றாற்போல்வனவும் புனைந்துரை வகையான் கூறியதேயாம் ஆகலானும், தன்மை விரவுத்திணை ஆகாது என மறுக்க. மரம் முதலியன பேசுவனவாகச் சான்றோர் செய்யுட்கண் வருதலின், அவை புனைந்துரை எனவே படும் ஆகலான், இவையும் அன்னவேயாம் என்க. இனி, மந்தி முதலிய உண்மையால் பேசியனவேயாம் எனினும், எறும்பு பேசினவற்றை ஒரு வேந்தன் கேட்டு நகைத்துத் தன் மனைவிக்குக் கூறித் தலையிழந்தான் எனப் புராணங்கள் கூறுதலின், எறும்புகள் பேசுதல் பெற்றாம்; அவை பேசுதல் குறிப்பால் உணர்த்துதல் அன்றி மொழயால் பேசுதல் அன்று என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது; முடியவே, அஃறிணைப் பெயர்கள் எல்லாம் இவ்வாறு ஒன்றற்கு ஒன்று குறிப்பால் உணர்த்தும் என்பது பெறப்பட்டது ஆதலின், மந்தி முதலிய பேசுதலும் அவ்வியல்பிற்றேயாம் என்க. இங்ஙனம் அன்றாயின், உயர்திணை அஃறிணை என்னும் |
|
|
|