உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் என்ற இரண்டனுள்ளே அடங்குவன பிறவற்றை நுண்ணறிவினார் அன்றி ஏனையோரும் விளங்கிக் கோடற்பொருட்டு விளக்கிக் கூறினார். உயிர்ப்பொருள், உயிர்இல்பொருள் என்பனவும் அன்ன. கடியென்கிளவி (தொல்.சொல்.383) என்பது கடி என்ற ஓர் உரிச்சொல்லையே சுட்டுவதால் சொன்மை தெரிதலாம். ‘புனிறு என்கிளவி’ (தொல்.சொல்.375) என்பதும் அது. சாத்தன், உண்டான் என்பன பெயர்ப்பொருளையும், அப்பொருளின் புடைப்பெயர்ச்சியாகிய வினையையும் முறையே உணர்த்தலான் பொருண்மை தெரிதலாம். |