குறித்துத் தானும் பெயரை, பெயரால், பெயர்க்கு என்றாற் போன்று உருபு ஏற்கும் நிலையைச் சுட்டியவழிச் சொன்மை தெரிதலாம். ஆகவே, சொல் தன்னையும், பொருளையும் தனித்தனி உணர்த்துவதோடு சேர்த்தும் உணர்த்தும் இயல்பிற்றாதலும் பெற்றாம் இங்ஙனம் கொள்ளாக்கால், சொல் என்னும் சொல் பொருள் உணர்த்தும் என்பதும், பெயர் என்னும் பெயர்ப்பின் உருபு வருதலும் பொருந்தாவாம் என்க. இதனைச் ‘சொன்மை தெரிதலும்’ (தொல்.சொல்.156) என்ற நூற்பாவிற்குச் சேனாவரையர் உரைத்த உரையாலும் உணர்க.முயற்கோடு; யாமை மயிர்க்கம்பலம் என்பன உலகில் காணப்படாமை கொண்டு இவற்றைப் பொருள் அல்ல எனல் கூடாது. இவற்றைப் பொய்ப்பொருள் என்றே கொள்ளல் வேண்டும். பொய்ப்பொருளையும் பொருளாகக் கொள்ளல் வேண்டும் என்றே சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் கூறினர். (தொல்.சொல்.155) இது தொல்காப்பியனார் முதலாயினாருக்கும் கருத்தாதல் |
முதலிய நூற்பாக்களான் உணரப்படும். ‘கட்டிய சொல்லாவது முயற்கோடு, கூர்மரோமகம்பலம் கரதலரோமபாசம், துன்னுசிக்குடர் என்பன’ எனப் பொய்ப் பொருளையும் பிறிதொரு பெயராற் கூறி உடன்பட்டார் பிரயோக விவேக நூலார். (19-உரை) இந்நூலுள் அகத்திய நூற்பாக்களாகக் காட்டப்படுவனவெல்லாம் முன்னையோர் கூற்றை மறாது உட்கொண்டு காட்டப்படுவனவே. அவை சாலவும் பிற்ப்பட்டனவாதல் சொல்லமைப்பானும் பொருளமைப்பானும் தேற்றம். |