சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா- 213

ஒத்த நூற்பாக்கள்:
 

 ‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’.

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’.

‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்’.

‘தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோற்றலும்
இருபாற்று என்ப பொருண்மை நிலையே’.

வேற்றுமை எட்டும் திணையிரண்டும் பால்ஐந்தும்
மாற்றுதற் கொத்த வழுஏழும் - ஆறொட்டும்
ஏற்றமுக் காலம் இடம் மூன்றோ டிரண்டிடத்தால்
உரை-மேற்தோற்ற உரைப்பதாம்

ஏற்ற திணையிரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
வேற்றுமை எட்டும் தொகை ஆறும்-மாற்றரிய
மூன்றிடமும் காலங்கள் மூன்றும் இரண்டிடத்தால்
தோன்ற உரைப்பதாம் சொல்.

‘ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே’.

எச்சொல்லும் பெயர்வினை இடைஉரி எனநான்கு
இவற்றுள் பொதுவென இயற்சொல் திரிசொல்
ஒருமொழி தொடர்மொழி ஒருவிலாப் பொதுமொழி
பகாப்பதம் என்றா பகுபதம் என்றா
ஆகுபெயர் இருதிணை ஐம்பால் மூவிடம்
சாரியை எனப்பொதுத் தகுதிஈ ராறே’
தொல்.சொல். 1

155


156


157




சொல். வீ. 83.




நே. சொல். 2




நன். 259







தொ.வி. 42